Breaking News

PTA புத்தகத்தில் இருந்து 42 மதிப்பெண்களுக்கு வினாக்கள்

     பிளஸ் 2 தமிழ்பாட பொதுத்தேர்வில் , 42 மதிப் பெண்க ளுக்கு , பி . டி . ஏ . , புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்ட தால் , இப்புத்தகம் வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டு கின்றனர் . தமிழகம் முழுக்க , பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு , கடந்த 2ம் தேதி துவங்கியது . தமிழ்ப்பாடத்தேர்வு , எளி மையாக இருந்ததாக மாண வர்கள் தெரிவித்தனர் . மொத்தம் , 90 மதிப்பெண் களுக்கு , மூன்று மணிநேரம் தேர்வு நடந்தது .

      இதில் , 42 மதிப்பெண்களுக்கான வினாக்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட , பயிற்சி புத்தகத்தில் இருந்து இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது . நாளை ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடக்கவுள்ளதால் , பி . டி . ஏ . , புத்தகம் வாங்க , பெற்றோர் பலர் ஆர்வம் காட்டுகின்றனர் . ராஜவீதி , துணிவணிகர்மேல் நிலைப்பள்ளியில் , இப்புத் தகத்துக்கான விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது .

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில் , ' தமிழ்ப்பாட தேர்வில் , 76 மதிப்பெண்களுக்கு , பி . டி . ஏ . , புத்தகத்தில் இருந்து வினாக்கள் இடம் பெற்றதாக , சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது . ஆனால் , 42 மதிப்பெண்களுக்கு தான் , வினாக்கள் இடம்பெற்றுள்ளன . மேலும் , புதிய பாடத்திட்டம் என்பதால் , இதுபோன்ற வினாவங்கியில் பயிற்சி பெறுவ தன் மூலம் , கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் , தேர்ச்சி பெற வாய்ப்புள் ளது . ஆனால் , அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் , இப்புத்த கத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும் என உறுதியாக கூற முடியாது . இதை மாணவர்கள் பயிற்சி பெற , பயன்படுத்தி கொள்ளலாம் ' என்றனர் .


No comments