CPS பிடித்தம் செய்த பணம் பங்குச்சந்தையில் முதலீடு! 6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்
CPS பிடித்தம் செய்த பணம் பங்குச்சந்தையில் முதலீடு! 6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்
இந்திய பொருளாதாரத்தின் மோசமான வளர்ச்சிப் பாதையின் காரணமாக ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மும்பை பங்குச் சந்தை தற்போது கொரோனா வைரஸ்-ல் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தை கடந்த 6 வர்த்தக நாளில் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்துள்ள நிலையில் இந்தியச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவில் டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் அறிவிக்கும் இதனால் பங்குச்சந்தையில் கணிசமான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி இந்திய நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் சர்வதேசச் சந்தை காரணத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments