Breaking News

விஜய் வீட்டில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை உண்மையா

விஜய் வீட்டில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை உண்மையா


விஜயின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பதால் அவரைக் காண அவர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்.

கரோனா எதிரொலியால் சென்னை முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் சூழலில், சென்னை நகராட்சி அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று அவர்களின் பயண விவரங்களை சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக பிரதமரின் உத்தரவின்படி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ACTOR VIJAY

மேலும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனையும் நடத்தி வருகிறது. விஜயின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பதால் அவரைக் காண அவர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார். இந்த அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஒரு சோதனை நடைபெறவில்லை என நகராட்சி தரப்பில் உறுதியான தகவல்கள் வந்துள்ளன.

No comments