ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுரை
ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுரை
மாணவர்களுக்கான கல்வி திட்ட பணிகளை , வீட்டில் இருந்தே ஆசிரியர்கள் மேற் கொள்ளலாம் ' என , பள்ளி கல்வி இயக்குநர் , கண்ணப்பன் கூறியுள்ளார் . இது குறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு , அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை :
இந்த இக்கட்டான காலகட்டத்தில் , வீட்டில் ஆசிரியர்களும் , கல்வி துறை பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . வீட்டில் இருக் கும் போது , கல்வி சம்பந்தப்பட்ட பணிகளை யும் , பாடத்திட்டம் குறித்த முன்னேற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் .
வரும் கல்வி ஆண்டில் , கற்றல் , கற்பித்தல் தொடர்பான திட்டங்கள் வகுக்கலாம் . மாணவ - மாணவியருக்கு பிடித்தமான நடனம் , ஓவியம் வரைதல் , பராம்பரிய உணவு சமைத்தல் , வண் ணம் தீட்டுதல் , நாடகம் போன்றவற்றுக்கான கருத்துகளை உருவாக்கலாம் . அரசின் உத்தரவுப் படி , அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்பு கள் , உரிய நேரத்தில் வழங்கப்படும் . இவ்வாறு , அவர் கூறியுள்ளார் .
No comments