Breaking News

பள்ளிக்கல்வித் துறை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்

பள்ளிக்கல்வித் துறை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்


மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் எனப் பெயர் மாற்றம் செய்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மீதான விவாதத்துக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* 1,575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும்.
* 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும், மாணவர்களின் நலனுக்காக, ரூ.82.34 லட்சம் செலவில் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். சிறைவாசிகளுக்கான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.20.33 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* பொதுத் தேர்வுகளுக்கு தரம் மேம்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ.13.50 கோடி செலவில் வழங்கப்படும்.
* அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.


* சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலி வடிவில் பாடநூல்கள் ரூ.30 லட்சம் செலவில் தயாரித்து வழங்கப்படும்.
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.4.93 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* மாணவர்களின் படைப்பாற்றல், கலை உணர்வு, தனித் திறமைகளை மிளிரச் செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வண்ணத் திருவிழா ரூ.5 லட்சம் செலவில் நடத்தப்படும்.
* அரசு பள்ளிகளில் 2 மற்றும் 3ம் வகுப்புகளில் பயிலும், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைதீர் கற்றல் பயிற்சி புத்தகம் ரூ.1 கோடியே 65 .
* சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் உடல் இயக்க வல்லுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி ரூ.19.76 லட்சம் செலவில் வழங்கப்படும்.
* அனைத்து நூலகங்களிலும், குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


* குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கப்படும்.
* மத்திய மற்றும் மாநில அரசின் விருது பெற்ற தமிழ் நூல்களை நூலகங்களுக்கு வாங்கும் திட்டம் ரூ. 60 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
* இயற்கை எய்திய நூலகப் பணியாளர்களின் நூல் இழப்பிற்கான அபராதத் தொகை ரத்து செய்யப்படும்.
* கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தையல், இசை மற்றும் ஓவியம் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்க தேவையான உபகரணங்கள் வழங்கும் திட்டம் ரூ. 8.29 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
* மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.


* 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் பெயருடன் பெற்றோர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு முதன்மைப் பாடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விதமாக, பாடத் தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.
* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்படும்.
* ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை நடத்திடும் நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட ஐஐடி, எம்ஐடி போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.


No comments