தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு
தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27 . 3 . 2020 முதல் 13 . 4 . 2020 வரை நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் . இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு , அதாவது 15 . 4 . 2020 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன . 11ஆம் வகுப்பிற்கு 23 . 3 . 2020 மற்றும் 26 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் , 12ஆம் வகுப்பிற்கு 24 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
No comments