Breaking News

கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க கேமரா மெக்சிகோவில் புதிய முயற்சி

கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க கேமரா மெக்சிகோவில் புதிய முயற்சி

195 மெட்ரோ ரயில் நிலையங்களில் கேமரா மூலம் கரோனா வைரஸ் நோயாளிகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை கண்டுபிடிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் காய்ச்சல் உள்ளவர்கள் வந்தால், இந்த கேமரா கண்டுபிடித்து சிக்னல் கொடுக்கும்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் கேமரா

உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. மெக்சிகோவில் இதுவரை 12 பேர் கரோனா வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், 700-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கே வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிலையங்களில், சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி உடலில் வெப்பம் அதிகமானவர்களை கண்டுபிடித்து, சிக்னல் கொடுக்கும்வகையில் இந்த கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


No comments