மக்களே உஷார் தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று அதற்கு என்ன காரணம்?
மக்களே உஷார் தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று அதற்கு என்ன காரணம்?
டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்களை சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் பாதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளது. தற்போது இந்த வைரஸ் பரவல் அதிகமாவதற்கு காரணம் டெல்லி மாநாடு தான் என கூறப்படுகிறது. கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை டெல்லி நிஜாமுதீனில் நடந்த மதரீதியான மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தில் மட்டும் 1,131 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்கப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக தொற்றுக்களை தவிர்க்க முடியும் எனக் கூறுகின்றனர். அந்த மாநாட்டில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டுள்ளதால் மக்கள் இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
No comments