தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவை மீறி தேர்வு பணி: ஆசிரியர் சங்கம் புகார்
''தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவை மீறி பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இன்று பிளஸ் 2 பொதுதேர்வு தொடங்குகிறது.
பிளஸ் 2, பிளஸ் 1, 10 ம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் இந்தமாதம் முழுவதும் நடக்க உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். இதனால் தேர்வு பணியில் இருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். உத்தரவையும் மீறி பெரும்பாலான மாவட்டங்களில் பிளஸ் 2 அரசு பொதுதேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.
இதனால், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணி பாதிக்கும். எனவே, தேர்வு பணிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
No comments