பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த கோரிக்கை
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த கோரிக்கை
பொருள் : மாண்புமிகு அம்மாவால் பணியில் அமர்த்தப்பட்ட பகுதி நேர பயிற்றுநர்களின் ( சிறப்பாசிரியர்கள் ) மாத தொகுப்பூதியமான ரூ . 7 , 700 / - ( ஏழாயிரத்து எழுநூறு ) யை அவர்களுடைய சொந்த வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்துமாறு கோருதல் , சார்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 , 7 , 8 - ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு பாடங்களை போதிக்கும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பள்ளியின் வங்கி கணக்கில் ( SMC ) வரவு வைக்கப்பட்டு பிறகு அப்பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவரும் ( School Management Committee ) பள்ளி தலைமை ஆசிரியரும் இணைந்து காசோலையில் கையொப்பம் இட்டு அதற்கானப் படிவத்தையும் பூர்த்தி செய்து பிறகுதான் பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் செலுத்தப் படுகிறது . இதில் பல சிக்கல்களும் பல போராட்டங்களின் இடையே தான் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுகிற நிலையே உள்ளது . தற்போது " கொரோனா " என்றொரு உயிர்க் கொல்லியால் அதனை தடுக்கும் வகையில் பல நல்ல நடவடிக்கைகளை நம் பாரத பிரதமரும் , நம் மாநில முதலமைச்சரும் மேற்கொண்டு வருகிறார்கள் . ஒருவருக்கொருவர் தன்னை தானே தனிமை படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது .
SMC தலைவரை சந்திப்பதிலும் ஊதியத்திற்கான காசோலையில் கையொப்பம் பெறுவதிலும் மிகுந்த அலைச்சலும் சிரமங்களும் ஏற்பட்டு இம்மாதத்திலிருந்தே சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் . இதனால் பகுதிநேர பயிற்றுநர்களின் குடும்பங்கள் மேலும் பல துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் வழியை ஏற்படுத்தி விடலாம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படலாம் . பகுதிநேர பயிற்றுநர்களே தம் ஊதியத்துக்கான அனைத்து பணிகளையும் தம் பள்ளியில் இருந்தே மேற்கொண்டு வருவதால் " கொரோனா ' தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது . ஆகவே மேற்காண் பொருள்படி போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு உதவுமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
No comments