என்னை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை - பிரதமர் நரேந்திர மோடி
என்னை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை - பிரதமர் நரேந்திர மோடி
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நான் எடுத்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
கரோனா வைரஸால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது. இதில் 87 பேர் குணமாகி உள்ளனர், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 867 ஆக உள்ளது.
இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நான் எடுத்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மீது சிலர் கோபமாக இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்தப் பிரச்னையில் இருந்து நாம் வெளிவர இது மாதிரியாக கஷ்டமான முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியமானது. மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
ஊரடங்கு உத்தரவை யாரும் வேண்டும் என்றே உடைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை என்று எனக்கு தெரியும், ஆனால் சிலர் அதை செய்கிறார்கள் அவர்களுக்காக நான் சொல்வது, ஊரடங்கை பின்பற்றவில்லை என்றால் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது.
கரோனா வைரஸை எதிர்த்து நிறைய பேர் போராடி வருகின்றனர். வீட்டில் இருந்து அல்ல, வீட்டிற்கு வெளியில் இருந்து, அவர்கள் வேறும் யாரும் இல்லை, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள். அவர்கள் தான் உண்மையான வீரர்கள்.
கரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன். சமூக விலகலை கடைபிடியுங்கள், அதற்காக மற்றவர்களை காயப்படுத்த வேண்டாம், புரிந்து நடந்துகொள்ளுங்கள்” என்று பேசி உள்ளார்.
No comments