Breaking News

தேர்வு குறித்து மின்சார வாரியம் புதிய அறிவிப்பு

தேர்வு குறித்து மின்சார வாரியம் புதிய அறிவிப்பு

கள உதவியாளர் பணி விண்ணப்ப விநியோகம் ஒத்திவைப்பு

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவி யாளர் பணிக்கு , விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகள் ஒத் திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது .


தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள 2900 கள உதவியா ளர் ( பயிற்சி ) பணிக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது . இதற்கான விண்ணப்பம் மின்வாரிய இணையதளத்தில் மார்ச் 24 - ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது . இந்நிலையில் , இந்தப் பணிகள் ஏப் . 15 - ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது .
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு : தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நேரடி நியம னம் மூலம் கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்காக , மார்ச் 24 - ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


கொரோனா தொற்று தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்கான இணைய வழியாக விண்ண ப்ப விநியோகம் ஏப் . 15 - ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . விண்ணப்பம் பெறப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதில் கு றிப்பிடப்பட்டுள்ளது .

No comments