Breaking News

ஆல்பாஸ் பட்டியல் தயாாிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

ஆல்பாஸ் பட்டியல் தயாாிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்



 ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, ஆசிரியர்கள் தேர்ச்சி பட்டியல் தயார்படுத்தி வைக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு முதற்கட்டமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.தற்போது, ஏப்., 14ம் தேதி வரை தேசிய அளவில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
 பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு தேர்வும், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முற்றிலுமாகவும் நடத்தப்படவில்லை. தற்போது, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க அரசு அறிவித்துள்ளது.

 இதற்கான நடவடிக்கைகளை பின்பற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  இதனால், அந்த வகுப்பு மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.



 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அவர்களுக்கான மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வழியாக தெரிவிக்க வேண்டும்.

  🟡பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளி தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு, தொடர் நடவடிக்கைகள் எடுப்பதை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வுஅலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.இதுதொடர்பான விபரங்களை, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு, பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.


No comments