Breaking News

கருத்தரங்கு நடத்த கல்லூரிகளுக்கு தடை

கருத்தரங்கு நடத்த கல்லூரிகளுக்கு தடை


    'கொரோனா' தடுப்பு நடவடிக்கையின், ஒரு கட்டமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதை மீறி, சில கல்லுாரிகள், பல்கலைகளில் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்வதாக, உயர் கல்வித் துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே, 'எந்த கூட்டங்களையும் நடத்தக் கூடாது' என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


   இதை தொடர்ந்து, தமிழக கல்வியியல் பல்கலை சார்பில், அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'கல்வியியல் கல்லுாரிகளில் வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றாலும், வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதாக தெரிய வந்துள்ளது. அதுபோன்று, எந்த கருத்தரங்கு கூட்டங்களும் நடத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments