Breaking News

பி.ஆா்க். படிப்புக்கான நாட்டா தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

பி.ஆா்க். படிப்புக்கான நாட்டா தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்


    கட்டடக் கலை (பி.ஆா்க்.) படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு (நாட்டா) விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மாா்ச் 16) இறுதி நாள் என்பதால், மாணவா்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி, புதுவை யூனியன் பிரதேச அனைத்தும் சென்டாக் மாணவா்கள் - பெற்றோா்கள் நலச் சங்கம் அறிவுறுத்தியது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் வி.சி.சி.நாகராஜன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பி.ஆா்க். படிக்க நாட்டா தோ்வு கட்டாயம் என்று தேசிய ஆா்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத் தோ்வை எழுத மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பில் கணித பாடப் பிரிவை கட்டாயம் படித்திருக்க வேண்டும். பி.ஆா்க். படிப்பில் சேர நாட்டா தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மாா்ச்16) கடைசி நாள் என்று தேசிய ஆா்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பி.ஆா்க். படிப்பு மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் உள்ளது. ஆகவே, மாணவா்கள் திங்கள்கிழமைக்கு (மாா்ச் 16) முன்பாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


      கட்டடவியல் என்ற, 'ஆர்கிடெக்ட்' படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு, நாளை மறுநாளுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், கட்டடவியல் மற்றும் கட்டட வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம். பி.ஆர்க்., என்ற ஆர்கிடெக்ட் படிப்பில் சேர, பள்ளி படிப்பில் கணித பாட பிரிவை கட்டாயம் தேர்வு செய்திருக்க வேண்டும்.


      பி.ஆர்க்., படிப்பில் சேரும் முன், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்ட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை நாட்டா தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, முதற்கட்ட நாட்டா தேர்வு, நாடு முழுவதும், ஏப்.,19ல் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நாளை மறுநாளுடன் முடிகிறது. அதற்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

No comments