Breaking News

உலகிலேயே முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதித்த நபர் வெய் கியுசியான், எப்படி பாதிக்கப்பட்டார் ?

உலகிலேயே முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதித்த நபர் வெய் கியுசியான், எப்படி பாதிக்கப்பட்டார் ?

கொரோனா வைரஸ் பாதித்த முதல் பெண்ணான வெய் சீன அரசு ஆரம்பத்திலேயே நோயின் தன்மையை அறிந்து செயல்பட்டிருந்தால், நிச்சயம் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவில் முதன்முதலில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.



கொரோனா பாதித்த முதல் நபர்
சீனாவில் உள்ள வுஹான் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய கடல் உணவுகள் சந்தையில் இறால் விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு தான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி பேப்பர், மிரர் யு.கே உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. வுஹானில் கடல் உணவு சந்தையில் இறால் விற்பனை செய்து வந்த வெய் கியுசியான் என்ற 57 வயதான பெண் சளி மற்றும் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதே அறிகுறிகளுடன் பலர் வுஹான் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அதன்பின் நிலைமை மிகவும் மோசமானது அனைவரும் அறிந்ததே. வெய் சிகிச்சைக்குப் பின் இப்போது குணமாகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வுஹான் நகராட்சி சுகாதார ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், வுஹானில் முதன்முதலில் கரோனா உறுதியான 27 பேரில் வெய் கியுசியான் என்பரும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.asiavillenews.com/article/coronavirus-first-case-in-china-wei-guixian-37358


No comments