பி.எப் கணக்கில் செலுத்தியுள்ள தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம்- மார்ச், 28 முதல் அமல்
பி.எப் கணக்கில் செலுத்தியுள்ள தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம் திரும்ப செலுத்தத் தேவையில்லை
பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பு தொடர்பாக, 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தார்.
அவற்றில், 'ஒரு தொழிலாளர் தன் பி.எப்., கணக்கில் செலுத்தியுள்ள தொகையில், 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை' என்ற அறிவிப்பும் ஒன்று.இதற்காக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், 1952ம் ஆண்டின், தொழிலாளர் வருங்கால நிதி திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
புதிய விதிமுறை, மார்ச், 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments