5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து ஏன்? சட்டப்பேரவையில்முதல்வர் பழனிசாமி விளக்கம்
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து ஏன்? சட்டப்பேரவையில்முதல்வர் பழனிசாமி விளக்கம்
மாணவர்கள் தரத்தை அறிந்து கல்வி அளிப்பதற்காக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப் பட்ட பொதுத் தேர்வு, திமுகவின் பொய் பிரச்சாரத்தால் ரத்து செய் யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் இதுதொடர் பாக நடைபெற்ற விவாதம்: க.பொன்முடி (திமுக): தமிழ கத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்தார். அப்போது திமுக தலைவர், பொதுத் தேர்வு நடத்தினால் பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். அதன்பின், கட்டாய தேர்வு இருக்காது. தேர்வு நடக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: நீங்கள் சொன்னதற்காக நிறுத்தவில்லை. அன்றைய கல்விக்கும் இன்றைய கல்விக்கும்வேறுபாடு உள்ளது. நாம் படிக்கும்போது ஒன்றாம் வகுப்பு, 2-ம் வகுப்பிலேயே சரி யாக படிக்கவில்லை என்றால் தேர்ச்சியை நிறுத்தி வைப்பார்கள். அப்போதுதான் கல்வித்தரம் உயரும்.5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற வைத்தால் 10-ம் வகுப்பை அந்த மாணவன் எவ் வாறு எதிர்கொள்ள முடியும். 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தனது தரம்குறித்து தெரியாது. பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அந்த மாணவனின் தரம் தெரியாது.தேர்வு நடத்தினால்தான் தரத்தை தெரிந்து கல்வி அளிக்க முடியும். அதேபோல், 8-ம் வகுப்பிலும் தேர்வு வைத்தால்தான் தரம் தெரி யும். அதன்பின் 10-ம் வகுப்பு போகும் போது மாணவர்கள் அதிக மதிப் பெண் பெற்று உயர்கல்வி செல்ல முடியும். அதேநேரம் எல்லோரும் விடுத்தகோரிக்கையின் அடிப் படையில் நாம் மட்டும் ஏன் எதிர்ப் பாக இருக்கிறோம் என ரத்து செய்தோம்.
பொன்முடி: தேர்வு வேண்டும் என்ற அமைச்சர், அதே நிலைப் பாட்டில் இருக்க வேண்டியது தானே?
முதல்வர் பழனிசாமி: நல்லதை சொன்னால் யாரும் ஏற்கமாட்டார் கள். 5-ம் வகுப்பில் தேர்வு வைத்தால் தவறுஎன்ன? அந்த காலத்தில் பியூசி படிக்கும்போது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் அனைத்து பாடத்தையும் மீண்டும் எழுத வேண்டும். அப்படிப்பட்ட நிலை இருந்தது. அப்போது தரமான கல்வி கிடைத்தது. அது போன்ற தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 5, 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு வைக்க எணணினோம்.நீங்கள் அவதூறான பிரச் சாரத்தை பரப்பியதால்தான் மாற் றிக் கொண்டோம். அதேநேரம் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தினால் எந்தத் தவறும் இல்லை.5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்வு எழுதினால்தான் மாணவர்களுக்கு பதற்றம் போகும். மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற் காகத்தான் அறிவிப்பு கொடுத் தோம்.
பொன்முடி: மாணவர்களுக்கு தேர்வு அதிகம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இஎஸ்எல்சி தேர்வு ரத்து செய்யப்பட்டது.
முதல்வர் பழனிசாமி: இன்றைய காலம் வேறு; அன்றைய காலம் வேறு. விஞ்ஞான உலகத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்கினால்தான் உலக அள வில் போட்டி போட முடியும். மாணவர்களுக்கு இன்றைய அறிவுப்பூர்வ கல்வி கிடைக்க மடிக்கணினி வழங்கினோம்.இவ்வாறு விவாதம் நடை பெற்றது.
No comments