ஜூன் 30 வரை வாகன பெர்மிட், ஓட்டுநர் உரிமங்கள் செல்லும் - மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு
ஜூன் 30 வரை வாகன பெர்மிட், ஓட்டுநர் உரிமங்கள் செல்லும் - மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு
போக்குவரத்துத் தொடர்பான வாகன பெர்மிட், ஓட்டுநர் உரிமம் போன்ற அனைத்து ஆவணங்களும் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வாகனத் தகுதிச் சான்றிதழ், அனைத்து வகையான பெர்மிட்கள், ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுகள் அல்லது போக்குவரத்துத் துறை சார்ந்த, பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியாகியிருக்கக் கூடிய எந்தவோர் ஆவணமும் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
No comments