Breaking News

2,900 கள உதவியாளர் வேலை மின் வாரியம் தேர்வு அறிவிப்பு

2,900 கள உதவியாளர் வேலை மின் வாரியம் தேர்வு அறிவிப்பு

   களப் பணிகளை மேற்கொள்ளும், 2,900 கள உதவியாளர் பணிக்கு, ஆட்களை நியமிப்பதற்கான தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், பொறியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, பல பதவிகளில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கள உதவியாளர் என்ற பதவியில், 2,900 ஊழியர்களை நியமிப்பதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மின் வாரியம், நேற்று வெளியிட்டுஉள்ளது. ஐ.டி.ஐ., முடித்தவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிப்பது, வரும், 24ம் தேதி துவங்கி, ஏப்ரல், 23ல் முடிகிறது.உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வுகள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இரு தேர்வுகள் நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கை அறிவிக்கை எண் 05 / 2020 நாள் : 19 . 03 . 2020 . 1 . கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து 24 . 03 . 2020 முதல் 23 . 04 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் :




No comments