14.03.2020 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
செ.வெ.எண்:27/மார்ச் நாள்: 12.03.2020
பத்திரிகைச் செய்தி
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டம், அரூர் வட்டம் மற்றும் நகரத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டத் திருவிழா நடைபெறுவதையொட்டி 14.03.2020-ஆம் தேதி சனிக்கிழமை அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 28.03.2020 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளுர் விடுமுறை நாளன்று, அரூர் சார்நிலைக் கருவூலத்தில் அரசு பாதுகாப்புக்காக அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி,இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தருமபுரி
No comments