11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
கரோனா அச்சம் காரணத்தால் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதாததால் 11 வகுப்பு மாண வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. முக்கிய மான இத்தேர்வுகளை எழுத முடியாததுமாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் குறித்த அச்சம் தான் பெரும்பான்மையான மாண வர்கள்தேர்வு எழுத வராததற்கு காரணம்.சிபிஎஸ்சி பாடத் திட்டத் தின்படியான பொதுத்தேர்வுகளும், பிறமாநில பாடத்திட்ட தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஒத்திவைக்கப்பட லாம் என்ற தவறான நம்பிக்கையில் பல மாணவர்கள் தேர்வுக்கு செல்ல தவறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.கரோனா அச்சம் தணிந்த பின்னர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழு தாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு தான் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். 11-ம் வகுப்புக்குவேதியியல், கணக் குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை ஏராளமான மாண வர்கள் எழுதாத நிலையில் 11-ம் வகுப்பிலும் அனைத்துமாணவர் களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.
No comments