வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை
வீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறியதாவது : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடை களிலும் குறைந்தபட்சம் 350 முதல் ஆயிரம் குடும்ப அட்டைகள் வரை உள்ளன . எனவே , தமிழக அரசு அறிவித்துள்ள ₹1000 ரேஷன் கடைகளில் வாங்குவதற்கு கூட்டம் ஒரே நேரத்தில் குவியும் வாய்ப்பு உள்ளது . அதனால் , இந்த உத வித்தொகையை வாங்க பொது மக்கள் யாரும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம் .
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியா ளர்கள் மூலம் , பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம் . | அதற்காக , ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உரிய பதிவேடுகளை கொண்டு வந்து , பணத்தை கொடுத்து விட்டு கையொப்பம் பெற்றுச் செல்வார்கள் . எந்த குடும்பமும் விடுபடாத வகையில் , உரிய நாட்களுக்குள் வழங்குவ தற்கான ஏற்பாடுகளை முறையாக திட்டமிட் டிருக்கிறோம் . எனவே , அனைவருக்கும் நிச்சயம் ₹1000 வீடு தேடி வரும் . அதேபோல் , அடுத்த மாதத்துக்கு தேவையான ரேஷன் பொருட்கள் , கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே , பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது . ரேஷன் பொருட்களை எப்போது வேண்டுமா னாலும் சென்று பெற்றுக் கொள்ளலாம் . கூட்டம் சேராமல் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கி , அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
No comments