Breaking News

10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்

      10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்


   மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம்மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம்மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம்மாணவர்களும் எழுதவுள்ளனர்.

  இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்கான நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதன்படி 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார். 15 நிமிடம் வினாத்தாளை படிக்கவும் 3 மணி நேரம் தேர்வு எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தேர்வுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.


  செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது எனவும், விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களைபயன்படுத்தக் கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டியுள்ளது.


   குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்க கூடாது என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப் பட்டுள்ளதாக தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

    10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.

    பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியாகிறது.

    பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு, இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு.




No comments