Breaking News

TNPSC தேர்வுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க முடிவு

     TNPSC, தேர் வுக்கான பயிற்சி மையங் கள் , லஞ்ச ஒழிப்புத் துறை , வருமான வரித்துறை உள்ளிட்டவற்றின் கண் காணிப்பு வளையத்தில் வந்துள்ளதாக , தகவல்கள் வெளியாகியுள்ளன .

    அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப , TNPSC சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்துவதற்கு , அனைத்து வகை நடவடிக்கைகளை யும் , TNPSC, எடுத்து வந்தது.

    ஆனால் , சமீபகாலமாக போட்டி தேர்வுகளில் , பல் வேறு முறைகேடு புகார் கள் எழுந்த வண்ணம் உள்ளன . குரூப் - 4 , குரூப் - 2 ஏ . குரூப் - 1 , வி . ஏ. ஓ உள்ளிட்ட தேர்வுகளில், இடைத்தரகர்கள் மற்றும் சில ஊழியர்களின் ஆதிக்கம் காரணமாக , 50க்கும் மேற்பட்டவர்கள் , முறை கேடாக தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

   இது தொடர்பாக , CBCID  , போலீசார் வழக்குபதிவு செய்து , 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் , சர்ச்சைக் குரிய போட்டி தேர்வு களில் , இடைத்தரகர்க ளுக்கு வினாத்தாள் கசிந்து , அவர்கள் வினாத்தாள் தயாரிப்பு பட்டியலில் உள்ள ஆசிரியரை வைத்து , விடைக்குறிப்பை தயார் செய்துள்ளது . மேலும் , விடைக்கு றிப்பு தயார் செய்ய , பயிற்சி மையத்தை சேர்ந்த சிலர் உடந்தையாக செயல்பட் டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

    முறைகேடுக்கு துணை போன தேர்வர்கள் , சில பயிற்சிமையங்களின் பரித்துரைகளில் , இடைத்தரகர்களை அணுகியதும் தெரிய வந்துள்ளது . இந்நிலையில் , பயிற்சி மையங்களை கண்கா ணிப்பு வளையத்தில் கொண்டுவர ,TNPSC . , நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . தமிழக லஞ்ச ஒழிப்பு துறை , வரு மான வரித்துறை , CBCID. , போலீசார் என , பல தரப்பிலும் ரகசிய கண்காணிப்பு துவங்கியுள்ளதாக கூறப் படுகிறது . டி . என் . பி . எஸ் . சி . , யின் வினாத்தாள்கள் , பயிற்சி மையங்களுக்கு கசிகிறதா என்பதை கண்காணிக்க வும் , தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது .

   பயிற்சி மையங்களில் , தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடக்கிறதா ; குறிப்பிட்ட மாணவர்களை தேர்வு செய்து , அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சட்டவிரோத உதவி செய்யப்படுகிறதா என , அரசின் பல்வேறு துறைகள் கண்காணிப்பதாக , TNPSC . , வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன .




No comments