தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சில டிப்ஸ் Tips for Students
தேர்வு எழுதுவதில் நேர நிர்வாகம்
மூன்று மணிநேரத்தில் நீங்கள் அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் பெறலாம் . அதாவது 180 நிமிடங்களில் 100 மதிப்பெண்கள் . அப்படியென்றால் ஒரு மதிப்பெண்ணுக்கு 1 . 8 நிமிடங்கள் . இதை ஒன்றரை நிமிடம் என்று வைத்துக்கொள்வோம் . அதாவது ஒரு மதிப்பெண்ணுக்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் . இப்படிச் செய்தால் இரண்டரை மணிநேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிடலாம் . மீதமுள்ள நேரத்தில் விடைகளைச் சரிபார்த்துக்கொள்ளப் பயன்படுத்தலாம் .
தேர்வின் முந்தைய நாள் செய்யவேண்டியவை
1 . புதிதாக எதையும் படிக்காதீர்கள் .
2 . குறிப்புகளை வைத்துப் படியுங்கள் .
3 . படித்த அனைத்தையும் தூங்கும் முன் நினைவுகூருங்கள் .
4 . இரவு கண்டிப்பாக ஐந்து மணிநேரமாவது தூங்குங்கள் .
5 . மறு நாள் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைப் பட்டியலிட்டு , அனைத்தையும் மறக்காமல் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் .
தேர்வு அன்று . . .
1 . அதிகாலை எழுந்ததும் இரவில் நினைவுகூர்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பாருங்கள் .
2 . குளித்து , உடுத்து , உண்டு , வணங்கித் தன்னம்பிக்கையோடு தேர்வுக்குச் செல்லுங்கள் .
3 . அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடவும் . நண்பர்களிடம் அதிகம் பேச வேண்டாம் . பதற்றம் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்கவும் .
4 . தேர்வு முடிந்த பின் , வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு , அன்றைய தேர்வில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி காலத்தை விரயமாக்காமல் , அடுத்த தேர்வுக்கு மனஉறுதியுடன் படிக்கத் தொடங்குங்கள்.
No comments