யார் இந்த மைக்கேல் டெல் Michael Dell? இவருக்கும் கணினிக்கும் என்ன தொடர்பு !
மைக்கேல் டெல் Michael Dell
💻 கணினி விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார்.
💻 இவர் தனது தந்தை வாங்கி தந்த புது ஆப்பிள் கம்யூட்டரை தனி தனியாகப் பிரித்து பிறகு சரியாக பொருத்தி கணினியை பற்றி கற்றுக்கொண்டார்.
💻 கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார்.
💻 அங்கேயே, கணினியின் உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்க ஆரம்பித்தார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.
💻 வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புக்கொண்டு தங்கள் தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளை அறிமுகம் செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.
💻 பிறகு 1987ஆம் ஆண்டு பி.சி.லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரை 'டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்' என மாற்றினார். 1992ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழின் 'டாப் 500' நிறுவனங்களின் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. அந்த பட்டியலில் மிகவும் இளமையான சிஇஓ இவர்தான்.
No comments