Breaking News

IAS, IRS சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு, UPSC அறிவிப்பு

     சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3- ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று (பிப்ரவரி 12) முதல் மார்ச் 3- ஆம் தேதி மாலை 06.00 PM மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தள முகவரி https://upsconline.nic.in ஆகும். மே 31- ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

     "இவ்வாறு யுபிஎஸ்சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு UPSC என்ற இணைய தளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃ ப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 796 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.


No comments