Breaking News

யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் Donald Trump? அமெரிக்காவின் 45வது அதிபரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

       அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். 1946ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர் டொனால்ட் ட்ரம்ப். 


     அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ம் ஆண்டு படித்து முடித்தார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலை டொனால்ட் ட்ரம்ப் கவனிக்கத் தொடங்கினார். அந்தத் தொழிலில் ட்ரம்ப் பெரிய அளவில் வளர்ந்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். 


    70 வயதான ட்ரம்ப் 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார். 1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும் டொனால்ட் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியுள்ளார். 


      இதனிடையே 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து ட்ரம்ப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்தான், 2012ம் ஆண்டு குடியரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்த ட்ரம்பிற்கு 2015ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஜனநாயகக்கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து இன்று 45வது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.


#trump #maga #donaldtrump #usa #republican #america #conservative #memes #politics #kag #makeamericagreatagain #meme #impeachtrump #trumptrain #iran #democrats #trumpmemes #impeachment #presidenttrump #a #news #keepamericagreat #funny #ww #gop #trumpsupporters #resist #notmypresident #democrat #bhfyp #modi #Indiavisit #americanpresident




No comments