Creamy Layer க்கு உட்பட்டவர்களுக்கு OBC சான்று அளிப்பது தவிர்ப்பது மற்றும் அதில் விதிவிலக்கு விபரங்கள்
1 . இந்திய அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் .
2 . பெற்றோரில் ஒருவர் ( அல் ) இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் .
3 . பெற்றோரில் இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் .
4 . பெற்றோரில் ஒருவர் ( அல் ) இருவரும் Class 1 / Group ' A ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN , IMF , World Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால் .
5 . பெற்றோரில் இருவரும் Class II / Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் மத்திய , மாநில அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தால் ,
6 . பெற்றோரில் கணவர் மட்டும் Class II / Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டு நாற்பது வயதுக்குள் Class 1 / Group ' A ' அலுவலராக பதவி உயர்வு பெற்றிருந்தால் .
7 . பெற்றோரில் இருவரும் Class II | Group ' B ' அலுவலராக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டும் , அதில் ஒருவர் இறந்துவிட்டிருந்தாலும் ( அல் ) நிரந்தர இயலாமையினால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 5 வருடத்திற்கு மேல் UN , IMF , World Bank போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பதவி வகித்திருந்தால் .
8 . பெற்றோர்களின் வருட வருமானம் ₹ 8 லட்சத்திற்கு மேல் இருந்தால் . ( சம்பளம் மற்றும் விவசாயம் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை )
9 . மேற்கண்ட விதிகளுக்கு உட்படாத மற்றும் மத்திய , மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சாதிகளைச் சார்ந்த அனைவரும் OBC சான்று பெற தகுதியானவர்கள் ஆவர் .
No comments