Breaking News

ஜேக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணப்பலன்கள் வழக்கப்படுமா? CM CELL Reply!

    ஜேக்டோ ஜியோ போராட்ட காலம் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணப்பலன்கள் வழக்கப்படுமா? CM CELL Reply!




    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 . 01 . 2019 முதல் ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு சில ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் 23 நாட்களுக்கு பிறகு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆணை பெற்று பணியில் சேர்ந்துள்ளனர் அவர்களில் ஆசிரியர் பணியில் பத்தாண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்கலாமா ? என்பதையும் மற்றும் ஊதிய உயர்வு மற்றும் தற்காலிக பணிநீக்கம் காலத்தில் இருந்த நாட்களுக்கு பணம் பலன்கள் வழங்கலாமா ? என்பதையும் முதலமைச்சர் தனிப் பிரிவு விதிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் மற்றும் செயல்முறை கடித நகல்களை பெற பணிவோடு வேண்டுகிறேன்.
CM CELL Reply


   மனுதாரர் கோரிக்கையினை முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு செய்ததில் ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு மீள பணியில் சேர்ந்த ஆசியர்களுக்கு தேர்வுநிலை மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு பணப்பலன் வழங்கும்போது பணிநீக்க காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்டுவது இல்லை . அடிப்படை விதி | 24 ( 5 ) ன் படி தற்காலிக பணிநீக்க காலம் முறைப்படுத்தப்பட்ட பின்னரே அக்காலம் தேர்வுநிலை மற்றும் ஆண்டு ஊதிய உயர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது . முதன்மைக்கல்வி அலுவலர் ந . க . எண் . 809 அ3 நாள் . 05 . 02 . 2020.

No comments