கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5 . 5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ஏப் . 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது .
இதில் 5 . 5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும் . ஆனால் , ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை . இதன்காரணமாக ஓய்வு பெற் றோருக்கும் , பணியில் இறந் தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை . இதனால் ,அதிருப்தி அடைந்த ஊழியர்கள் , ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 2016 - ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது .
இக்குழு இறுதியாக ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது . 2018 - ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது . ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர் கள் அதிருப்தியில் உள்ளனர் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது : புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் களிடம் பிடித்த தொகை , அரசின் பங்குத்தொகை என ரூ . 35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர் , பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளனர் .
புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு , பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன . ஆனால் , தமிழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை . மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும் . மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ . 1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ . 6 , 500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் . பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் . ஆனால் , அதை தரவில்லை . பிற மாநிலங் களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன் , அரசு கள் 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன . ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது . வல்லுநர் குழு அறிக்கை மீது நட வடிக்கை எடுத்து பழைய ஓய் வூதியத் திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் , என்று கூறினார் .
No comments