Breaking News

பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

    பொதுத்தேர்வு நெருங்குவதால் மார்ச் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது . சென்னை மாநகராட்சியில் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கு கின்றன .

     இந்த ஆண்டு 12 - ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 - லும் 10 - ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27 - லும் தொடங்கு கின்றன . 38 மாநகராட்சிப் பள்ளி களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 84 மாணவ - மாணவியர் 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வையும் , 32 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4 , 807 மாணவ - மாணவியர் 12 - ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர் .

    இவர்களுக்கான பயிற்சி வகுப் புகள் கடந்த 3 மாதங்களாக நடந்து வருகின்றன . மாணவ - மாணவியருக்கு காலை , மாலை வேளைகளில் மாநகராட்சி சார் பில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது . | இதற்கிடையே , பொதுத் தேர்வை எதிர்கொள்வது தொடர் பாக மாநகராட்சி உயர்நிலை மற் றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரி யர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அந்தந்த மண்டல அளவில் நடந்து வருகிறது . பொதுத் தேர்வு நெருங்குவதால் மார்ச் வரை , தொடர்புடைய பாட ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண் டும் என இந்தக் கூட்டங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது . மேலும் , அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெறவும் , மாணவர்கள் உயர் மதிப்பெண் பெறவும் கடுமையாக உழைக்கு மாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments