Breaking News

ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டம் மாற்றியமைக்க வேண்டும்: ஆளுநர் ஆலோசனை

    புதுச்சேரி:'ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, கவர்னர் கிரண்பேடி ஆலோசனை தெரிவித்தார்.ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தை மறு சீரமைப்பது தொடர்பான, இரண்டு நாள் கருத்தரங்கு, புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டியில் நடந்தது. நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:

    குழந்தைகளின் நலன் கருதியும், நாட்டின் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாகவும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைக்க வேண்டும். பள்ளிகளில், பெற்றோர்களை முக்கிய பங்குதாரர்களாக கருத வேண்டும். மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் அனைத்து பாடங்களையும் பள்ளியிலேயே முடித்துவிட்டு, வீட்டில் அவர்கள் படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும்வகையில் பள்ளிகள் செயல்பட வேண்டும்.

   விளையாட்டு, உடற்கல்வி மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கம், வாழ்க்கைத் திறன்களை கற்றுக் கொடுக்க பள்ளிகளும் பெற்றோர்களும் அக்கறை செலுத்த வேண்டும்.பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து பணியாற்றினாலே தேவையான மாற்றங்கள் தானே நடைபெறும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

   நிகழ்ச்சியில், என்.சி.டி.இ., தலைவர் சத்பீர்பேடி, கல்வித்துறை செயலர் அன்பரசு, அரபிந்தோ சொசைட்டி பிரதீப், நிர்வாக உறுப்பினர் விஜய் போதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments