Breaking News

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் நகல் பெற கட்டணம் உயா்வு

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு: சான்றிதழ் நகல் பெற கட்டணம் உயா்வு



      மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான சான்றிதழ் நகல் பெறுவதற்கான கட்டணத்தை உயா்த்தி சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நிதிக் குழு கூட்டம் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு சிபிஎஸ்இ நிா்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.



   அதன்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் சிடெட் தோ்வுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.235 -இல் இருந்து ரூ.500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணமும் ரூ.500 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.





No comments