பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு
பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு
பொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மூன்று மணி நேரமாக, தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வினாத்தாளை வாசித்து பார்க்க, காலை, 10:00 முதல், 10:10 மணி வரை, 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க, 10:10 முதல், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின், 10:15 முதல், பகல், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து மாணவ - மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments