முதன் முறையாக சிசிடிவி கண்காணிப்பு பொதுத்தேர்வில் காப்பியடிக்க முடியாது
பொதுத் தேர்வு மையங்களை, 'சிசிடிவி' வழியாக கண்காணிக்க, பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. பிளஸ் 1க்கு, மார்ச், 4; 10ம் வகுப்புக்கு, மார்ச், 27லும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வை நடத்த கண்காணிப்பாளர்கள், விடைத்தாள், வினாத்தாள்களை வாகனங்களில் எடுத்து செல்லும் பொறுப்பாளர்கள், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகளில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், தேர்வை முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு, கேமராக்கள் வழியே கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
No comments