Breaking News

அரசு ஊழியர்களின் பென்சன் விதிகளில் முக்கிய மாற்றம்

அரசு ஊழியர்களின் பென்சன் விதிகளில் முக்கிய மாற்றம்

         மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கை தொடர்பாக மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.


     அதன்படி, அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பான ஒரு உத்தரவில், 01.01.2004 அல்லது அதற்குப் பின் பணியில் சேர்ந்தவர்கள், தற்போதுள்ள என்.பி.எஸ். எனப்படும் தேசிய ஓய்வூதிய முறைக்குப் பதிலாக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972ன் கீழ் வருவார்கள். இவ்வுத்தரவு ஏராளமான மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய உத்தரவின்படி, மத்திய அரசு ஊழியர்கள் வரும் மே 31ஆம் தேதிக்குள் இப்புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது என்.பி.எஸ்.


     முறைக்குப் பதிலாக மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள், 1972க்கு மாறிக் கொள்ளலாம். ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்; அதுவே இறுதியானது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி, புதிய ஓய்வூதிய முறைக்கு மாறியோரின் என்.பி.எஸ். கணக்குகள் வரும் நவம்பர் 1 முதல் முடக்கப்படும்.



No comments