பள்ளிகளில் புத்தகப்பை இல்லாத சனிக்கிழமைகள் - தமிழகத்திலும் நிறைவேறுமா ?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்கப்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளியின் ஆசிரியர் சங்கீதா தலேகான்கர் கூறுகையில், “ சனிக்கிழமை பள்ளிக்கு வரும்போது புத்தகப்பை கொண்டு வரவேண்டாம் என்று கடந்த வாரம் அறிவித்தோம். இதற்கு பிறகு வகுப்பறையில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமையில் படிப்புக்கு பதிலாக கைவினைப் பொருட்கள், விளையாட்டு, ஓவியம் வரைதல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கிறோம். இது அவர்களுக்கு மன அழுத்தமில்லாமல் இருக்க உதவுகிறது. இதனால், பிற நாட்களில் படிப்பின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்”
No comments