விருப்ப ஓய்வு பெறுவதற்கான நிபந்தனையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான நிபந்தனையாக
1 . 50 வயது நிறைவு ( மற்றும் )
2 . தகுதியான பணிக்காலம் ( Qualification Service ) 20 ஆண்டுகள் முடித்திருத்தல் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது .
பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் பணியாளர்கள் 50 வயதினை நிறைவு செய்ய வேண்டும் அல்லது தகுதியான பணிக்காலம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் போதுமானது என்று விருப்ப ஓய்வு பெறுவதற்கான புதிய நிபந்தனை அரசால் தெரிவிக்கப்பட்டன் து எனவே , 50 வயது பூர்த்தியானவர்கள் அல்லது 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் முடித்தவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது . மேற்கண்ட விவரங்கள் அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments