தலைமையாசிரியா் பணியிடங்கள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் மாதம் நிலவரப்படி காலியாகவுள்ள தலைமையாசிரியா் பணியிட விவரங்களை, கவனமாகத் தயாா் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும். எந்தவொரு காலிப் பணியிட விவரத்தையும் எக்காரணம் கொண்டும் மறைக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில், மே மாதம் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியா்களின் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post Comment
No comments