Breaking News

BEO தேர்வு எழுதுவது எப்படி? மாதிரி தேர்வு எழுதி பார்க்க Click the below link

BEO தேர்வு எழுதுவது எப்படி?



1. நமக்கென்று கொடுக்கப்பட்ட கணிணியில் உங்களின் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் செய்தவுடன் வினாத் திரை தோன்றும்.
2. ஒவ்வொரு வினா வாக மட்டுமே தோன்றும்.
3. வினாக்கள் கொள்குறி வகையினதாக இருக்கும்.
4. உங்களுக்கான நேரம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.
5. உங்களின் புகைப்படம் உங்களின் சுய விபரம் ஆகியவை உங்களின் திரையில் தோன்றும். 



6. ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்ட நான்கு விடையில் சரியான விடையை க்ளிக் செய்யவும். 
7. தவறாக செய்து விட்டால் க்ளியர் ரெஸ்பான்ஸ் பட்டனை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் நினைக்கும் சரியான விடையை க்ளிக் செய்து சரிசெய்து விடலாம்.
8. சரியான விடையை க்ளிக் செய்து விட்டால் நெக்ஸ்ட் பட்டனை அழுத்தினால் அடுத்த கேள்வி வரும். 
9. இவ்வாறாக அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கவும். 
10. முன்பு பதில் அளித்த கேள்விகளை பார்வையிடப்ரிவியஸ் பட்டனை அழுத்தினால் முன்னாடி உள்ள கேள்விகளை பார்வையிட முடியும். 



11. தேவை ஏற்பட்டால் க்ளியர் ரெஸ்பான்ஸ் கொடுத்து திருத்திக் கொள்ள முடியும். 
12. தேர்வு நேரம் திரையில் குறைந்து கொண்டே வரும். தேர்வு நேரம் முடியும் வரை நமது இடத்தில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். 
13. திரையின் ஒரு பகுதியில் மொத்தக் கேள்விகள், நாம் பதில் அளித்துள்ள கேள்விகள், பதில் அளிக்காத கேள்விகள் என அனைத்தும் தோன்றும்.
14. தேர்வு நேரம் முடிந்தவுடன் தானாக பதில்கள் ஏற்றுக்கொண்டு விடும். எக்சிட் பட்டனை அழுத்துங்கள் என்று திரையில் தோன்றும். 
15. எக்சிட் பட்டனை அழுத்தி விட்டு வீட்டுக்கு புறப்படலாம். 

16. மாதிரி தேர்வு எழுதி பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள். Click Here




No comments