80 சதவிகித்திற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி முறைக்கு மாற வாய்ப்பு
80 சதவிகித்திற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி முறைக்கு மாற வாய்ப்பு
வருமான வரி செலுத்துபவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர், மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அப்படி மாறும் பட்சத்தில் அரசுக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறையின் படி வீட்டுவாடகைப் படி, விடுமுறை பயணச் சலுகை உள்ளிட்டவையும் இனி வருமானமாக கருதப்படும்.
அதே சமயம் வரி விகிதம் குறைக்கப்பட்டதால், வரி செலுத்தும் முறை எளிதாக்கப்பட்டதை பயன்படுத்தி, சிறிய தொகையை கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டாலும், பலர் புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறுவர் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் உள்ளவர்கள் புதிய வரிவிதிப்புக்கும். உயர் நடுத்தர வகுப்பினரும், பணக்காரர்களும் தற்போதைய முறையில் தொடர வாய்ப்புள்ளதாவும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments