25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியமைக்கான வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கான படிவம்
25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியமைக்கான வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதற்கான படிவம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின் படி ஆரணி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டுள்ளது . இந்நிதி ஒதுக்கீட்டில் இருந்து 2202 - 02 - 109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் மாசற்ற சிறப்பக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு பரிசுகளும் வெகுமதியும் என்ற நுண் கனக்குத்தலைப்பில் சிறப்பு வெகுமதித் தொகை ரூ . 2000 / - வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
எனவே தங்கள் பள்ளியில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் 21 . 02 . 2020 அன்று மாலை 5 . 00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
No comments