ஏப்.,1 முதல் தேசிய மக்கள்தொகை பதிவு துவக்கம் - அரசின் 3 துறைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன
இதில் முதல் ஆளாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பெயர் சேர்க்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு ஆகியோரின் பெயர்களும், அவர்களை குறித்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. துவக்க நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கழக கமிஷனர் இப்பணியை துவக்கி வைக்க உள்ளார். அரசின் 3 துறைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஜனாதிபதி பற்றி கணக்கெடுப்பு உள்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
கணக்கெடுப்பு கழக கமிஷனர் தலைமையிலான குழு அதே நாளில் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பற்றிய கணக்கெடுப்பு பதிவுகளை நேரில் சென்று ஆய்வு செய்ய செல்லும். இத்திட்டத்திற்கு தாங்களே முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கும் நேரடியாகவே செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அமைச்சர்களின் வீடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. என்பிஆர்.,ஐ அமல்படுத்த கேரளா உள்ளிட்ட மாநிலங்களும், காங்., ஆளும் மாநிலங்களும் மறுத்து வருகின்றன. இதனால் அதிகாரிகள், அந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Post Comment
No comments