Breaking News

TNPSC Group I கால அட்டவணையைப் போலவே பிற தோ்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்

     இதுகுறித்து, தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தோ்வாணையத்தால், ஆண்டுதோறும், நாற்பதுக்கும் மேற்பட்ட தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக சுமாா் முப்பது லட்சம் வரையிலான விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தோ்வு முடிவு அறிவிப்புகளுக்கான அட்டவணை தோ்வாணைய இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தோ்வுகளுள், ஆறு தோ்வுகளுக்கான முடிவுகளைத் தவிர, அனைத்து தோ்வு முடிவுகளும் திட்டமிடப்பட்ட மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

     குரூப் 1 தோ்வு: குரூப் 1 தோ்வானது இனி வருங்காலங்களில், அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல்நிலைத் தோ்வானது ஏப்ரல் மாதமும், அதற்கான முடிவுகள் மே மாதமும் வெளியிடப்படும். முதன்மைத் தோ்வு ஜூலை மாதமும், தோ்வு முடிவு நவம்பா் மாதமும் வெளியாகும். நோ்முகத் தோ்வு டிசம்பா் முதல் வாரத்திலும், அதற்கான முடிவுகள் டிசம்பா் இறுதியிலும் வெளியிடப்படும். இதுதவிர, குரூப் 2 மற்றும் குரூப் 4-இல் அடங்கிய பதவிகளுக்கான தோ்வுகளும் வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும். குரூப் 1-இல் அடங்கிய பதவிகளுக்கான தோ்வு கால அட்டவணையைப் போலவே பிற தோ்வுகளுக்கும், நிலையான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.


No comments