ரெளலட் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது.? அதனால் நடந்தது என்ன ?
ரெளலட் சட்டம் அல்லது ரவ்லட் சட்டம் என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும். மார்ச் 1919ல் இச்சட்டம் இயற்றப்பட்டது. விடுதலை / சுயாட்சி வேண்டும் இந்தியர்களை அடக்கவும், காலனிய அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
சர் சிட்னி ரெளலட் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து புரட்சி இயக்கங்களை ஒடுக்க வழிவகைகளை ஆராய்ந்தது.
இச்சட்டம் கடுமையானது என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் எதிர்த்தனர். இதற்கு எதிரான போராட்டங்கள் ரெளலட் சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டன. இந்தச் சட்டத்தின்கீழ் எந்த இந்திய பிரஜையையும் பிணைஆணை இல்லாமல் கைது செய்யலாம், விசாரணை இன்றி சிறைப்படுத்தலாம், கூட்டங்களில் பங்கெடுக்கத் தடைவிதிக்கலாம், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வசிக்க நிர்பந்திக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவரை மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்துத் தண்டனை வழங்குவார்கள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு மேல்முறையிடு செய்யும் அனுமதி கிடையாது.
நன்றி
ஆட்சியர் கல்வியின் தினம் ஒரு தகவல்
No comments