Breaking News

இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய உத்தரவு

    இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் படிப்பவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது.

     இதற்காக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளில் உள்ள வசதிகள், அதன் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கூறப்பட்டு உள்ளன. மாணவியருக்கான சைக்கிளில், முன்னால் இரும்பு வலையால் ஆன கூடை; சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்காமல் இருக்க, தடுப்பு வசதிகள் இருக்கிறதா என, பார்க்க வேண்டும். ஒவ்வொரு சைக்கிளிலும், அதற்கான உத்தரவாத அட்டை இருக்கிறதா என அறிந்து, அதையும் மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என, அதில் கூறப்பட்டு உள்ளது.


No comments