Breaking News

அரையாண்டு தேர்வு வினாத்தாள் வெளியானால் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

      தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கு அரையாண்டுத் தேர்வுகள் 12 முதல் டிசம்பர் 23 தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. அரையாண்டு தேர்விற்கு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.


       9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தினமும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அன்றைய பாடத்துக்கான வினாத்தாள் கட்டுக்களை வினாத்தாள் பயிற்று மையத்தில் மட்டுமே பொறுப்பான ஆசிரியர் அல்லது பணியாளரை அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். வினாத்தாள்களை பெற்றுக் கொண்ட நேரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.


      ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் நாளில், ஒரு அறைக்கு 10ம் வகுப்பில் 10 மாணவர்களும், 12ஆம் வகுப்பில் 10 மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தினசரி வினாத்தாள் இணை தலைமை ஆசிரியரின் நேரடி பார்வையில் வழங்கப்பட வேண்டும். 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் பொதுத்தேர்வு போலவே கண்டிப்புடனும், தேர்வு முறைகேடுகள் இல்லாத வகையிலும் நடைபெற வேண்டும். புகார்கள் செய்யப்பட்டால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 10, 12ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை தேர்வுத் துறை விடுத்துள்ளது.





No comments