Breaking News

தமிழகத்தில், வனக் காவலர் பணிக்கான தேர்ச்சி பட்டியல் வெளியீடு

      தமிழகத்தில், வனக் காவலர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற, 465 பேரின் பட்டியலை, வனத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான, ஆன்லைன் தேர்வு, அக்., முதல் வாரத்தில் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 1,692 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர்.



      இவர்களுக்கான உடல் திறன் தேர்வுகள், வண்டலுார் உயிரியல் பூங்காவில், நவ., 26ல் நடந்தது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் முதலாவது பட்டியலை,வனத்துறை வெளியிட்டுள்ளது. மொத்தம், 564 பணியிடங்களில்,465 பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வனத்துறை வெளியிட்டுள்ளது. இதில், 12 பேர் கூடுதல் விபரங்கள் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




No comments